இதுவரை நீங்கள் ஸ்மார்ட் போனே பயன்படுத்தியதே இல்லையா ? Apple, iPhone ... இந்த பெயர்களைக் கேட்டாலே ஆச்சரியப் படுபவரா ? ஐயாயிரம் ரூபாய் செலவில் ஒரு புது மொபைல் வாங்க தயாராக இருப்பவரா? ... இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் இந்தக் கட்டுரையைப் படிப்பதை தொடருங்கள். நீங்கள் ஏற்கனவே ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எனில் இக்கட்டுரை உங்களுக்கு பயன்படாது.
காரில் வரும் ஒரு இளைஞன் சாலையில் சென்றுகொண்டிருக்கும் அழகான பெண்ணிடம், ஒரு இடத்திற்கு செல்ல வழி கேட்கிறார், அந்த பெண் தன்னுடைய மொபைல் போனில் இருக்கு GPS Application ஐ பார்த்து வழி சொல்லுகிறார், அதைப் பார்த்து ஆச்சரியப்படும் அந்த இளைஞரைப் பார்த்து ”உங்ககிட்ட இல்லயா அங்கிள் ?” என்று கேட்பது போல் வருகிறது அந்த Smart Phone விளம்பரம்.
”Why this ஸ்மார்ட் போன் ?
மொபைல் போன் என்றால் சாதாரணமாக நமக்கு மனதில் வருவது பேசுவது, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, கேம் ஆடுவது, இன்னும் அதிகமாகப் பயன்படுத்தினால் சிறிய அளவில் low quality புகைப் படம் மற்றும் ஒளிப் படம் எடுப்பது தான் நினைவுக் வரும். ஆனால் இப்போது 3G தாண்டி 4G வந்த பின்னும் நம்மில் பலருக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்ப்டுகின்ற பயன்களைப் பற்றி தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராவதில் ஸ்மார்ட் போன்களின் பங்கு
நீங்கள் TNPSC, TRB, TNTET, TNUSRB மேலும் பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டு இருப்பவர் எனில், ஸ்மார்ட் போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
போட்டி நிறைந்த ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, மற்றவரை விட (சக போட்டியாளரை விட) ஏதாவது ஒன்று அதிகமாக தெரிந்திருந்தால் மட்டுமே நிலை நிற்கவும், வெற்றி பெற முடியும்.
ஸ்மார்ட் போனை படிப்பதில் பயன்படுத்துவதில் சில நன்மைகளை பட்டியலிடுகிறேன் .
1.எந்த ஒரு சந்தேகத்தையும் அந்த நொடியே இணையத்தில் தேடி விடை காணலாம். இதற்கு
மாதம் 98 ரூபாய் செலவில் 2G இணைப்பு மட்டும் இருந்தால் போதும்.
2.உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
3.உங்கள் போட்டித்தேர்விற்கு தொடர்பான இணையங்களை எப்போது வேண்டுமானலும் பார்வையிடலாம்.
4.தினமணி, தினமலர், தினதந்தி, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என அனைத்து நாளிதழ்களையும் சிறிய மென்பொருளை மட்டும் நிறுவுவதன் மூலம் தினவும் ஓசியாகவே படிக்கலாம்.
5.Notes எடுக்கும் வழிமுறைகள் மிகவும் எளிதாகும்.
6.பேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் உங்கள் நண்பர்களுடன் பாட சம்பந்தமாக எவ்வளவு நேரமானாலும் விவாதிக்கலாம். SMS காசும் மிச்சமாகிறது.
7.நூலகத்திற்கு செல்கிறீர்கள் , முக்கியமான பங்கங்களை உங்கள் ஸ்மார்ட் போனின் மூலம் புகைப்படம் எடுத்து பின்னர் பயன்படுத்தலாம்.
8.ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள் எனில் பைபில், குரான், கீதை என எல்லா புனித நூல்களும் உங்களுக்கு இலவச மென்பொருள்களாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
9.திருக்குறள், நாலடியார் முதல் ஜெயகாந்தன் சிறுகதைகள் , சுஜாதாவின் எழுத்துக்கள் வரை அனைத்துமே 'அப்ளிகேசன்' களாக கிடைக்கின்றன.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு நன்மைகள் இருந்தும் இன்றைய தலைமுறை ஸ்மார்ட்போன்களை தவறாக பயன்படுத்துவதும் நீங்கள் அறிய வேண்டியது. ஆனால் 'நல்லவனுக்கு நல்லவன்' என்பது போல நல்ல வழியில் பயன்படுத்தினால் உங்கள் 'இயந்திரன்' நண்பனாக மாறிவிடும் இந்த ஸ்மார்ட்போன்.
ஒரு ஸ்மார்ட் போன் பின்வரும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கும்.
- இயங்கு தளம் (Operating System) - நாம் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் Windows OS போன்ற அடிப்படை மென்பொருள்.
- மென்பொருள்கள் (Software Applications) - சாதாரணமாக நமது கணினியில் Google Talk, MS office, Media Player, Youtube downloader, Browser இருப்பது போன்று நமக்கு தேவையான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்தலாம்.
- அதிவேக இண்டர்னெட் வசதி - 2G, 3G, 4G என நமது வசதிக்கு ஏற்ப இன்டர்னெட் இணைப்பை பயன்படுத்து கணினியில் செய்வது போன்றே Browse செய்யலாம்.
- Qwerty Keyboard/Touch - கணினியில் பயன்படுத்துவது போன்ற QWERTY கீ போர்ட் அல்லது முழுவதும் தொடுதிரை வசதியாகவோ இருக்கலாம்
- மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களுடன் இணைப்பு - நீங்கள் நினைத்த நேரத்திலேயே பயன்படுத்தும் வகையில் Gmail, Ymail போன்ற மின்னஞல் சேவைகளும் Facebook, Orhut போன்ற சமூக வலைத்தளங்களுடனான இணைப்பு.
பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியுமா ?
முன்பெல்லாம் இப்படிப்பட்ட ஸ்மார்ட்போன்களை பெரிய தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஏனென்றால் அவற்றின் விலை அந்த அளவு, ஒரு குறைந்த விலை Blackberry யின் விலையே 20,000 மேல் இருந்தது என்றால் பாருங்கள். ஆனால் இன்று இந்த நிலை மொத்தமாக மாறிவிட்டது. இதற்கு காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். ஆம், அந்த மந்திர வார்த்தை “ ஆண்ட்ராய்ட்” . இந்த ஆண்ட்ராய்ட் வந்த உடனே தான் அதுவரை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே தங்கள் சேவையை வழங்கி வந்த Blackberry, Apple, iPhone கூட தங்கள் நிலையை விட்டு இறங்கி வந்து விட்டன.
இப்போது Sony, LG, Samsung, HTC என அனைத்து முன்னணி மொபைல் போன் நிறுவனங்களும் இந்த Android OS யை கொண்ட ஸ்மார்ட்போன்களையே விற்பனை செய்கின்றன, அதுவும் மிகவும் குறைந்த விலையில். ஆனால் Nokia மட்டுமே இன்னும் தனது குடும்ப சொத்தான Symbian, Anna OS சார்ந்துள்ளது. Android ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது Nokia வின் Symbian, Anna OS கள் மூன்றாம் தரம் தான்.
ஆண்ட்ராய்ட் எனும் அற்புதம் !
 |
Android Symbol - www.google.com |
Android என்பது Google மற்றும் Open Handset Alliance (OHA) ஆல் தயாரிக்கப்பட்ட மொபைல் மற்றும் டேப்லட் பி.சி க்களுக்கான ஒரு Open Source (இலவச) Operation System. (இயங்கு தளம்). 2007 ல் தான் வந்த வேகத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் iOS, மைக்ரோசாப்டின் Windows, நோக்கியா நிறுவனத்தின் Symbian, RIM ன் Blackberry போன்ற வணிக ரீதியான மொபைல் OS களையே புரட்டிப் போட்டு விட்டது. இதற்கு காரணம் இதன் எளிய பயன்பாடு மற்றும் இலவசமாக கிடைக்கப் பெறுகின்ற ஆச்சரியமூட்டும் 3 லட்சத்திற்கும் மேலான Applications. இதுவரை 10
பில்லியன் தரவிறக்கம் செய்யப் பட்டுள்ளன்.
இதன் சிறப்பம்சமே இந்த Android நான் முன்பு கூறியுள்ள ஒரு ஸ்மார்ட் போனிற்கான் அம்சங்களுடன், எண்ணிலடன்காத, விதவிதமான வசதிகளைத் தருகிறது. நாம் செய்ய வேண்டியது, ஒரு GPRS இணைப்பை பெற்றுக்கொண்டு, ஆண்ட்ராய்ட் மார்கெட்டில் (http://www.market.android.com/) சென்று நாம் விரும்பும் Application ஐ தரவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்த வேண்டியது தான்.
இந்தியாவில் கிடைக்கப்பெறும் சில குறைந்த விலை Android போன்கள்
Micromax Bolt A27 - Rs. 3740
Android v2.3.5 (Gingerbread) OS
3.5-inch TFT LCD Touchscreen
0.3 MP Primary Camera
Dual SIM (GSM + GSM)
1 GHz Processor
Wi-Fi Enabled
Expandable Storage Capacity of 16 GB
FM Radio
Videocon A15 - Rs. 3499
Dual Standby SIM (GSM + GSM)
0.3 MP Secondary Camera
3.5-inch Capacitive Touchscreen
Android v2.3.6 (Gingerbread) OS
Wi-Fi Enabled
3.2 MP Primary Camera
1 GHz Processor
Expandable Storage Capacity of 16 GB
மேலும் தெரிந்து கொள்ள ...
Show Room அல்லது Online எங்கு வாங்கலாம் ?
ஸ்மார்ட் போன்களைப்பொறுத்த வரையில் Mobile Showroom களில் வாங்குவதை விட
Online - ல் தான் மிகக்குறைந்த விலையில் வாங்கமுடியும். என்னதான் தினம் தினம் டி.வி யிலும், பேப்பரிலும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தாலும் showroom விலை கிட்டத்தட்ட MRP விலைக்கு அருகில் தான் இருக்கும். ஆனால் ஆன்லைனில் வாங்கும் போது 20 % முதல் 50 % வரை விலை குறைவாக வாங்கலாம். அப்படியானால் தரத்தில் குறைவு இருக்குமோ ? என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் 1 வருட உத்தரவாதம் மற்றும் insurance எல்லாமே தருகிறார்கள். அப்படியானால் எப்படி ஆன்லைனில் மட்டும் விலை குறைவாக கிடைக்கும் என்று கேட்கிறீர்களா ? காரணம் அவர்களுக்கு லட்சக் கணக்கில் மாத வாடகை கொடுத்து கடை நடத்த தேவையில்லை, விற்பனையாளர்களுக்கு சம்பளம் கொடுக்கத்தேவையில்லை, தேவையான பொருட்களை கம்பெனிகளிடமிருந்து நேரிலேயே மொத்தமாக கொள்முதல் செய்கிறார்கள், நமக்கும் லாபம் தானே.
இப்போது இந்தியாவில் இருக்கும் ஆன்லைன் கம்பெனிகளில் www.flipkart.com சிறந்த முறையில் இயங்கிவருகிறது. ஆன்லைனில் ஸ்மார்ட் போன் வாங்குவதென்று முடிவெடுத்துள்ளீர்கள் என்றால் FLIPKART (CLICK Here) இணையதளத்திற்கு சென்று பல மாடல்களை பார்த்து உங்களுக்கு பிடித்த மொபைலை வாங்குங்கள். நன்றி !